Tuesday 21 April 2015

**********************************************************
சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை! இந்த மண்ணில்-ஆனால்
பஞ்சமே! சுவாரசியமானதும் இந்த மண்ணிலே! தான்!
**********************************************************
வயதோ! அதிகரிக்கிறது
ஆயுளோ! குறைகிறது
"பிறந்த நாள் கொண்டாட்டம்"
**********************************************************

நீயும் நானும்
சேர்திருக்கும் போது வராதது...
நீயா நானா என்று
விவாதிக்கும் போது வருவது...
நாம் இம்மண்ணில்
தோன்றும் போது தோன்றியது
நாம் இம்மண்ணில்
இருக்கும் வரை ஆட்கொண்டிருக்கும்
நினைவுகளின் சங்கமம்.
நாம் இருக்கும் போது
நம் மதிப்பை அறியாதது...
நாம் மாய்ந்தப்பின்
நிரந்தரமாவது...
இப்படிக்கு
"பிரிவு"
**********************************************************

தினம் தினம்
கிழிக்கப்படுகிறேன்
உங்களால்
நான்!

என்னை
கிழித்த
நீங்கள்
என்ன
கிழித்தீர்கள்!
என்று
தெரியாமலே!

காலத்தின்
அருமையை
உணர்ந்து
கிழியிங்கள்!

வீணாக
என்னை
கிழிக்காதீர்கள்!

"நாட்காட்டி"

**********************************************************
மழை வர மாதிரி...
"crowd" ட" இருக்கு
"cloud" ....
**********************************************************

‪எல்லோரும்‬ அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும்...
‪‎என்பதில்‬ தெளிவாக இருக்கிறார்கள்....
‪‎தான்‬ எப்படி வாழ வேண்டும் என்று தான்...
‪‎யாருக்கும்‬ தெரிவதில்லை!

**********************************************************

‪‎நம்மை‬ பற்றி அடுத்தவர் "குறை" கூறாதவரை
‪‎நாம்‬ அடுத்தவரின் "நிறையை" "குறை"
‪‎ஆக்குவதில்லை‬!
**********************************************************

"நீ" எப்போதும்
கொட்டும் ‪"அருவியாக‬" இரு
சொட்டு ‪‎நீராகிவிடாதே‬!
பிறருக்கு கொடுப்பதில்!
**********************************************************

‪தண்ணீர்‬" -ஆக இருந்தாலும்
"கண்ணீருக்கு" மதிப்பு அதிகம்
உனக்காக "கண்ணீர் "சிந்தும்
உறவுக்களை சேர்த்துகொள்!

**********************************************************

நான் பேச்சளார் இல்லை- ஆனால்,
என் எழுத்து ஒருவரை பேசவைக்கும்!...

"நான் எழுத்தாளர் இல்லை -ஆனால்,
ஒரு எழுத்தாளரின் படைப்பு.....
என்னை பேசவைக்கும்!.....

**********************************************************

"கைம்பெண்"...

இவர்கள்
பொட்டுகளை
இழந்த
மலர்ந்த
மொட்டுக்கள்....?

*********************************************************

‪‎தண்ணீர்‬ தின உறுதிமொழி!

"நீரின்" அவசியத்தை
உணர்ந்த-"நீர்"

ஒருபோதும் மறவாதீர்கள்
"நீர் " இல்லாமல்
"நீர்" இல்லை...

"நீருக்காக" காத்திருக்கும் "நீர்"
அதை வீணாடிக்காமல் பார்த்து
கொள்வீர்!-நீர்

"நீர்" இல்லாவிட்டால்
"நீரும்" இருக்க முடியாது.
என்பதை உணர்ந்த "நீர்"

அதை போக்க!
மழை நீரை சேமிப்பீர்!-நீர்
"நீர்" இல்லா பூமியை!
"நீரால்" நீரப்புவீர்!-நீர்

**********************************************************

‪சில்லரை‬ (காசு)

நாம் இருக்கும்போது நித்திரை!
நாம் இறந்தபின் முத்திரை!

**********************************************************

தேவையானதை வாங்குவதைவிட
அவசியமானதை வாங்குவதை
‪‎வழக்கமாக்கிகொள்ளுங்கள்‬!-ஆனால்

அவசியமானதை தேவைக்கு மேல் வாங்குவதை
‪‎பழக்கமாக்கி‬ கொள்ளாதீர்கள்!

**********************************************************

உலக வனநாள் "உறுதிமொழி"

காடு அழுகிறது வீடாக மாறுவதற்கு
தன்னை அழிப்பதால் அல்ல!

தன்னை அழிக்கும் மனிதர்கள்
தன்னால் அழியப்போவதை நினைத்து!

காட்டை அழித்து
வீட்டை வளமாக்கும் முன்-யோசி

நீ அழிப்பது காட்டையல்ல!
உன்னையே!

மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!

மரம் வளர்ப்போம்!
காட்டை பாதுகாப்போம்!

**********************************************************

வாழ்க்கையில
நம்பி"கை" வைத்தால்
எதையும் சாதிக்கலாம்
"நமது நம்பிக்கை"யால்

**********************************************************

பணத்துக்காக
வயித்த நிரப்ப நாய் மாதிரி அலைஞ்ச அவன் ஏழை!

பணம் கொடுத்து வாங்கி
வயித்த குறைக்க நாயோட அலைஞ்ச அவன் பணக்காரன்!

**********************************************************

பெரும்பாலோனோர்
வாழ்க்கையை
நேற்றையை நினைவில்
இன்றையை நிஜத்தை
நாளைய கனவில்
தொலைக்கிறோம்!

**********************************************************

உங்கள் குழந்தைகளை
படிப்பதற்காக அடிக்காதீர்கள்!
அடிப்பதனால் படிப்பதைவிட
படிப்பதைவிடவே விரும்புவர்கள்!

"அடிச்சா" வராது
"புடிச்சா" தான் வரும்
"படிப்பு'

**********************************************************

"தன்"
"பலவீனத்தை" அறிந்திருப்பதே "பலம்"...
"தன்"
"பலத்தை" அறியாமலிருப்பதே "பலவீனம்"...

**********************************************************

"பொய்"கேட்கும் போது
"இனிப்பாக"த்தான் இருக்கும்-அது
"உண்மையில்லை" என்று
தெரியும்போது தான்
"கசப்பாக"மாறுக்கிறது!

**********************************************************

"வாழ்க்கையில்" கற்றுக்கொள்ளும் வரை
"வியப்பாக" இருந்தது எல்லாம்
கற்றப்பின் இம்புட்டு தானா!
என்று மாறுவது தான்-பெரும்
"வியப்பாக" இருக்கிறது!

**********************************************************
"வாழ்க்கையில"
"யாருமே" ஜெயிக்கனுமேன்னு"போராடல!
"போராடி"தான் ஜெயிக்கறாங்க!பெரும்பாலும்!

**********************************************************

No comments:

Post a Comment