Sunday 19 April 2015

******************************************************

‪#‎மனிதர்களுக்கு‬ கணிதம் சொல்லும்
வாழ்க்கை பாடம்!
‪#‎கணித‬ செயல்பாடும் மனித வாழ்வும்!

3+3=6 என்று கூறினால் இது சரி இதை தான் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
3+3=4 என்று கூறினால் இது தவறு என்றும் இதை சொல்லக்கூடாது என்றும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இதைப்போலவே மனித வாழ்க்கையிலும் இப்படி தான் சக மனிதர்கள் தங்களிடம் நடந்துக்கொள்ள வேண்டுமென்று நம் மனம் எதிர்ப்பார்க்கிறது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறவுகள் சரியானது எனவும்,
அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத உறவுகள் தவறானதாகவே
நாம் நினைத்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றமடைய செய்கிறது-அதே
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றவும் செய்கிறது!
என்பதை புரியாமல்,

இங்கே
3+3=6 என்பது அந்த தருணத்தில் அந்த செயல்பாடு சரியானதாக அமையுமே
தவிர எல்லாம் தருணத்திலும் அது சரியானதாக அமைய வாய்ப்பில்லை.
உதாரணமாக
3-3=0, இங்கே எண்கள் அதே தான், ஆனால் செயல்பாடு வேறு, எதிர்ப்பார்ப்பதும் வேறு, வாழ்க்கையும் அப்படி தான்!
உன் செயலுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
அதுபோலவே,

3/3+3=4,அங்கே நாம் தவறு என்று சொன்னது சரியாகிறது,
காரணம், செயல்பாட்டில் மாற்றம் அதுபோல தான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
உணரும் பட்சத்தில் அவர்களின் சூழலிலேயே அதை நாம் அணுக வேண்டுமே தவிர
அவகளின் செயல்பாடுகளை சரி,தவறு, என்று நாம் தரம் பிரிக்கக்கூடாது.

இங்கு எண்கள் மனிதர்களையும்,
செயல்பாடுகள் என்பது அவர்களின் எண்ணத்தையும்
இங்கு முடிவு என்பது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
என்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக,

கடும் பனியின் தாக்கத்தில் வாழும் மனிதருக்கு
சூரிய உதயம் என்பதே வரபிரசாதம்!
கடும் வெப்பத்தால் அவதியுறும் மனிதருக்கோ!
சிறு மழை சாரல் கூட வரம் தான்!
ஆகையால்,இங்கு
எது சரி? எது தவறு?என்பதை நம்முடைய
சூழல்தான் தீர்மானிக்கின்றன!
என்பதை உணர்வோம்!

சிறிது நேரம் எண்களோடு விளையாடினேன்!
எண்களுக்கு தான் மனித வாழ்க்கையோடு எத்தனை தொடர்பு!
எண் கணிதம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை
மனித எண்ணங்களிலும் தான்!

வெறும் எண்ணிக்கையில் உயந்ததல்ல வாழ்க்கை!
நல்ல எண்ணங்களால் உய்ரந்ததே வாழ்க்கை!

என்னே கணிதம்!-நம்
எண்ணமே! கணிதம்!

******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com

No comments:

Post a Comment