Sunday 9 June 2013

பாடங்களின் சிறப்பு

"அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்."
                                                                                               *பெர்னாட்ஷா*


      என்ற சொல்லுக்கிணங்க மாணவ செல்வங்களாகிய நீங்கள் படிக்கும் பாடத்தின் அவசியத்தை உணர்ந்து படிக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளது.

      * கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்னதாக தோன்றிய மொழி என்ற சிறப்பைவுடைய மொழி பாடங்களில் முதலாவாதாக வரும் தமிழர்களின்
தாய்மொழியாம் 'தமிழ்மொழி'. அந்த 'தமிழ்மொழி' இன் நல்ல படைப்புகளை நன்கு படித்து நீங்களும் 'தமிழ்மொழி' இல்  நல்ல படைப்புகளை படைக்க வேண்டும்.

      * அடுத்ததாக இன்றைய நவீன உலகத்தின்  'இணைப்பு மொழியான ஆங்கிலத்தை' நன்கு கற்று உலக நாடுகளிடையே நல்லதொரு நட்புணர்வை வளர்க வேண்டும்.

      * அதற்கு அடுத்தபடியாக 'அறிவியலின் அரசி' என்ற சிறப்புடைய 'கணிதம்' எங்கும் கணக்கு எதிலும் கணக்கு என்பார்கள் அந்த சொல்லுக்கிணங்க  நாம் இப்பூவுலகில் பிறந்த நேரத்தில் தொடங்கி இறக்கும் நேரம் வரை நாம் வாழ்ந்த காலத்தை சொல்லும் கணக்கை மனபாடமின்றி புரிந்துகொண்டு பயிற்சி செய்து கணிதத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து 'கணிதமேதை' களாக வேண்டும்.

      * அடுத்ததாக விவாத்திற்குட்பட்ட தத்துவங்களையும், அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட விதிகளைவுடைய  நம் அறியாமையை களைந்து, அறிவை வளர்க்கும்  'அறிவியல் பாடம்'    இதை நீங்கள்   ஆராய்ந்து ,சோதனை மூலம் கற்றறிந்து வருங்காலத்தில்  பல அரிய கண்டுபிடிப்புகளை   கண்டுபிடித்து  'இளம் விஞ்ஞானிகளாக' வளம்  பெற்று வலம்வர வேண்டும்.                                                                      


       * அடுத்ததாக 'சமூக அறிவியல்' இன்றைய சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை படிக்கும் நீங்கள் அதை களைந்து நாளைய   சமூகத்தில் அதற்கு தீர்வு காண வேண்டும். என்ற எண்ணத்தோடு நின்றுவிடமால் இன்று வரலாறு படிக்கும் நீங்கள் நாளைய வரலாறு உங்களை படிக்குமாறு 'வரலாறு' படைக்க வேண்டும். என்ற  எண்ணத்தோடு படிக்க வேண்டும் என்று   சொல்லி வாழ்த்துகிறேன்.              

Friday 7 June 2013

சிந்தனை



இன்று ஒரு சிந்தனை என்றும் தேவை!

'கடவுளால் ' படைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் என்று நம்புகிறவர்கள் பலர் அந்த கடவுளை படைத்தவனே ' மனிதன் ' என்பதை மறந்துவிட்டார்கள்?



* எப்படி கடவுள் பிறந்தார் ?

'கடவுள் ' என்றால்  அன்பானவர் கருணையுள்ளம்
கொண்டவர் முக்கியமாக பிரச்சனைகளை தீர்க்கும் வல்லவர் , நல்லவர் , போன்ற  பண்புகளை உடையவராக  மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைபாத்திரம் தான் 'கடவுள் '.

பிரச்சனைகளை  உருவாக்கி கொள்பவன் மனிதன், ஆனால்  அதை தீர்க்கவோ தன்னால் படைக்கப்பட்ட
'கடவுளை' வேண்டுகிறான் (நாடுகிறான்). என்ன கொடுமை இது ?

* வீட்டிற்கொரு மரம் வளரு -என்று
   அரசாங்கம் சொல்கிறது .-ஆனால்
   இங்கே  வீட்டிற்கொரு மதம் வளர்கிறது.
   கூடவே பிரச்சனையும்  சேர்ந்து வளர்கிறது.
   இதனால் மதத்தால் 'மதம்' பிடிக்கிறது -இவ்வாறாக
   உருவாக்கப்பட்ட  மதத்தில் தங்களுக்கு ஒரு
   'குருவாக 'உருவமாகபட்டவர் அவரவர் வழிபடும் 'கடவுள்'.

* எங்கே கடவுள் ?
 
        என்று  கேட்டால் அந்த கற்பனை பாத்திரதிற்கு
தகுந்த கற்பனையான பதிலான 'அன்பே சிவம்'
என்று சொல்வார்கள். ஆனால் இங்கே  இருப்பதோ 'சிவம்' மட்டும் தான்!
 
அன்பு எங்கே?
 
       மதம் என்னும் பெயரால் மங்கிவிட்டதா? இல்லை -அதுவும்
கற்பனை தானா?

       என்னைப்பொருத்தவரை  தவறுகள் அதிகமாவதற்கு காரணம் 'கடவுள்'  
என்ற கற்பனை பாத்திரம் தான்.

இது மக்களை  மாக்களாக மாற்றுகிறது. மேலும்

தன்னப்பிக்கையை குறைத்து அவநம்பிக்கையை வளர்கிறது.
இதில் படித்தவன், படிக்காதவன் என்ற விதிவிலக்கில்லை.
ஏதாவது தவறு செய்தால் அதனை போக்க வேண்டும், என்றால் திரும்பவும்  
அந்த தவறு நிகழமால் பார்த்துகொள்வது  தான் சரியானது.

      ஆனால் இங்கோ 'கடவுளின்' பெயரால் 'பாவமன்னிப்பு' என்ற
மற்றும் ஒரு தவறு நிகிழ்கிறது.

      ஆகவே 'மன்னிப்பு' என்பது இன்னொரு தவறின்
ஆரம்பம்.

* வளர்ந்து  வரும் அறிவியல் முன்னேற்றகளை                  
   நாம் ஆராய்ந்து தான் ஏற்றுக்கொள்கிறோம் -ஆனால்
   'கடவுள்' என்ற கற்பனையை மட்டும் 'அறிந்தும் அறியாமல்'
   ஏற்று கொள்கிறார்கள்.

   இதனை மாற்ற ஒரே  ஒரு தந்தை பெரியாரால் மட்டும் முடியாது.    ஒவ்வொருவரும் பெரியார் ஆனால் தான் முடியம் .

குறள்

       "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
        மெய்ப்பொருள் காண் பதறிவு" - குறள் 423 (எப்பொருள்யார்)

இதன்பொருள்:
     
      எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர்    யாவர் சொல்லக் கேட்பினும்;

       அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு = அப்பொருளின் மெய்யாய  
பயனைக் காணவல்லது அறிவு.

இந்த குறளுக்கு ஏற்ற விளக்கத்தின்படி எத்தனைப்பேர்  வாழ்கிறார்கள்?

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்.  
புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

(எடுத்துகாட்டாக)

        இரண்டு நபர்களை கருத்தில் கொள்வோம்.
இரண்டு பேருக்கும் ஒரு போட்டி வைத்து யார் சொல்வது சரி? என்பதை
காண்போம்.

* போட்டியில் கலந்து கொள்பவரில் ஒருவர் பெரியவர் மற்றும் பள்ளி  
    மாணவன். பெரியவர் படித்தவர்.

* கேள்வி 1:
      8+7=? என்ன என்ற கேள்விக்கு

         மாணவன் பதில் 15 ]
                                                   எது சரி ?
         பெரியவர் பதில்  14 ]
         (பெரியவர் தவறுதலாக 14 என்கிறார்)

* கேள்வி 2:
      இறந்தவரின் இறுதி சடங்கிலிருந்து வரும்  ஒருவர் தன் மேல் 'மஞ்சள்'      
   தண்ணீர் சிறிது வுற்றி  கொள்கிறார் ஏன்?

          மாணவன் பதில்: 'மஞ்சள்' கிருமிநாசினியாக       .
                                                                இருப்பதால். ]
                                                                                                எது சரி?
          பெரியவர் பதில்:                     'சாமி  தீட்டு '.]                          

இந்த இரு கேள்விகளில் அனைவரும்

   * முதல் 'கேள்வி' இன் பதில் மாணவன் சொன்னது தன் சரி என்றும்    
      பெரியவர் சொன்னது தவறுயென்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
      
   ஆனால்

   * இரண்டாவது 'கேள்வி' இன் பதிலில் மட்டும் மாணவன் கூறிய பதில் சரி  
      தான் என்று தெரிந்து இருந்தாலும் பெரியவரின் பதிலான 'சாமி தீட்டு'  
      என்பதை தவறு என்று சுட்டிக்காட்ட தயங்குகிறார்கள் ஏன்?.

காரணம் சாமி குத்தமா?

         'ஆக' எவ்வளவு தான் அறிவியல் தன்மைபடி ஆராய்ந்து உண்மையை    சொன்னாலும், இந்த கற்பனை பாத்திரமான 'கடவுளை 'பற்றி ஆராய்வதே
குற்றம் என்று நம்பும் மக்கள் இடையே 'கடவுள்'
என்பது அவர்களுக்கு புரியாதலால் 'குரு'வாகவும்
புரிந்தவர்களுக்கு 'கடவுள் ' என்பது கற்பனை ஆகவும்
மொத்தத்தில்  'கடவுள் ' என்பது 'புரியாதபுதிர்' ராக
தான் உலா வருகிறது.

      இங்கே அறிவியல் தன்மை படி என்பது அறிவியல் படி இன்று சரியானதாக    
 உள்ள ஒன்று நாளை தவறாக இருப்பதாக கண்டுபிடிக்கபடுகிறது .

       ஆக அறிவியலே  ஆராய்ச்சிக்கு  உட்படுத்தும் போது 'கடவுளை 'மட்டும் ஆராயாமல் ஏற்பது சரியா?

       'நாத்திகம்' என்பது அனைத்தையும் அப்படியே ஏற்கமால்  ஆராய்ச்சி செய்து ஏற்பது என்று "சாக்ரடிஸ்"  அவர்கள் கூறுவார். ஆனால் இங்கே 'நாத்திகம்' என்பதற்கு 'கடவுள்'  மறுப்பாளர்கள் என்ற முத்திரை...
 
       'கடவுள்' என்ற கற்பனை பாத்திரத்தால் ஒற்றுமை
சீர்குலைகிறது?

       ஆனால் 'கடவுள்' இல்லை என்னும் போது ஒற்றுமை வலுபெருகிறது?

        'கடவுள் இல்லை' என்னும்  போது அதனை எதிர்ப்பாதற்காக ஒற்றுமை உருவாகிறது எப்படி என்றால்?

   * கடவுளை  வழிபடுப்பவர்கள் மதத்திற்கு  ஓர்
      'குரு' வை  தங்களின்  தலைவனாக வழிப்படுவதோடு
      மட்டும் அல்லாமல் தங்களின்  'கடவுள்' தான்  பெரியவர், என்றும்      
      உயர்ந்தவர் ,சக்தியுள்ளவர், என்றும் அவர்களுகிடையே சண்டையும்,  
      வன்முறையும், நிகழ்கின்றன. ஆக 'கடவுள்'  என்ற கற்பனைப்பாத்திரம்  
      இவ்வாறாக ஒற்றுமையை  சீர்க்குலைகிறது.

      ஆனால்  'கடவுளே ' இல்லை என்று ஒருவர் கூறும் போது அதனை எதிர்க்க எல்லாம் மதத்தினரும் ஒன்றுபடுகின்றனர்.

       இதன் மூலம் 'கடவுள் ' என்ற கற்பனைபாத்திரத்திற்கு உயிர்க்கொடுக்கும் போது ஒற்றுமை சீர்க்குலைக்கிறது.

மாறாக

       'கடவுள் ' இல்லை என்று கூறும் போது அனைவரும் ஒன்றுபட்டு
ஒற்றுமை வலுப்படுகிறது. இதனை நாம்  நன்கு சிந்திக்க வேண்டும்.

       இருக்கும்  இடத்தை விட்டு இல்லாததை தேடுவதா
ஆன்மிகம்?   இல்லை இல்லை, உண்மையான ஆன்மிகம் என்பது...



      'இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

      நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது'
                 
      "இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட 
       ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"

                                                              *அன்னை தெரசா*


      ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று பிரிப்பதைவிட நல்ல மனிதர்களில் தான் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து தேடினாலே போதும்...