Sunday 19 April 2015

*****************************************************
ஆணும்-பெண்ணும்
திருமணம் எனும் தேர்வு
எழுதுகிறார்கள் அதில் வெற்றிபெற்றால்
அம்மா-அப்பா என்ற பட்டம் இருவருக்கும்-ஆனால்
தோல்வியடைந்தால் "பெண்" மட்டும்
பட்டம் பெறுகிறாள் "மலடி"யாக.....

******************************************************

வீண்-வாழ்க்கை!
 
சோளக்காட்டு பொம்மைக்கு தெரியாது!-அது
விரட்டுவது உயிருள்ள பறவைகளை தான் என்று!
அந்த உயிருள்ள பறவைகளுக்கும் தெரியாது!
நம்மை விரட்டுவது உயிரற்ற பொம்மை தான்!-என்று!
வாழ்க்கையில் சிலபேர் அந்த சோளக்காட்டு பொம்மையை
போல் கூட வாழ்வதில்லை!
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாதது வாழ்கிறது மனிதனுக்காக..
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்த மனிதா!
நீ எப்போது வாழ்வாய்?
சக மனிதனுக்காக.....

******************************************************

ரெட்டை வாழைப்பழம்
சாப்பிட்டா இரட்டை குழந்தை பிறக்குமாம்
அய்யோ-பாவம்!
இதுத்தெரியாமல்
ஒற்றைக்குழந்தை இல்லாததால்
நம் சமூகம் வழங்கிய
"மலடி"என்ற பட்டதுடன்
"பெண்கள்"

*****************************************************

வாழ்க்கையில பெருபாலும்
"நடக்காத காரியங்களுக்கு"
"முக்கிய பிரச்சனையே"
"நடக்கணும்" என்பது தான்-அட
ஆமாங்க! உங்க கொழுப்பை குறைக்கனுன்னா
நீங்க தினமும்
"நடக்கணும்"
"நடக்கற காரியமா"சொல்லுங்க
நடக்கலன்னா
"காரியம் நிச்சயம்"

******************************************************

வாழ்க்கையில நமக்காக யாருமே இல்லன்னு நினைச்சிட்டு இருக்கோம்!
யாருமே! இல்லாத இடத்திலே இருக்கோம் என்பத மறந்து!

******************************************************
வாழ்கையிலே
விமர்சனங்கள் இல்லைன்னா?
"குறை" தெரியாது!
"நிறை"யை நிறைய தெரிஞ்சுக்கனுன்னா?
விமர்சனம் தேவை!

******************************************************

ஒரு குடத்தில தண்ணீர் 3/4 வாசி தான்
இருகின்னு "FELL" பண்ணுவதைவிட!
1/4 வாசி தான் இல்லேன்னு "FILL" பண்ணு!
வாழ்க்கை என்பதே!
feeling"களும்,"filling" களும் நிறைந்ததே!

******************************************************

‪#‎எது‬ வளர்ச்சி?

நேற்றையை நினைவில்
இன்றையை நாளை
சந்தோசமாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
நாளைய நினைவில்
இன்றையை நாளை
வீணாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
இன்றையை நாளில்
நேற்றையை நினைவையும்
நாளைய நினைவையும்
கலக்காமல் வாழ்வதும்!
நேற்றையை செயல்பாட்டைவிட
இற்றையை செயல்பாடு அதிகமாகவும்
நாளையை செயல்பாட்டைவிட
இன்றையை செயல்பாடு குறையாமலும்
செய்வதே வளர்ச்சி!
மொத்தத்தில் உன்னிடத்தில் உள்ளது தான்
உன் வளர்ச்சி!
போட்டி என்பது வாய்ப்பு
வெற்றி என்பது மகிழ்ச்சி
தோல்வி என்பது அனுபவம்
தோல்வி என்ற அனுபவத்தின்-மூலம்
வெற்றி என்ற மகிழ்ச்சியை
போட்டி என்ற வாய்ப்பினால்
முயற்சிச்செய்து அடைவோம்!

******************************************************

‪#‎அன்பை‬ விதையிங்கள்
"விருச்சமாக"
******************************************************

நன்றாக பேசுவதாக
நினைத்து ஒருவரின் மனதை
புண்படுத்துவதைவிட்டு
எதுவுமே பேசமால்
அவருடைய புண்ணுக்கு
மருந்திடலாம்!
******************************************************

வாழ்க்கையில
சுலபமானதை பின்பற்றுவதைவிட
கஷ்டமானது ஏதுவுமில்லை!
உன்னைப்போல் பிற
"உயிரையும் நேசி"

******************************************************

நேர்மை என்பது
அடுத்தவர்களுக்கு உண்மையாக
நடந்துகொள்வதில் இல்லை-மாறாக
தன் "மனசாட்சிக்கு"
உண்மையாக இருப்பதிலேயே
உள்ளது!

******************************************************

மனிதர்களில்
தியாகத்தை கூட கடமையாக
செய்யும் தியாகிகளும் உண்டு!

கடமையை கூட
தியாகங்களாக சித்தரிக்கும்
மகா தியாகிகளும் உண்டு!

******************************************************

‪#‎மனமாற்றம்‬!

சர்க்கரை உண்ணும் போது
கற்கண்டாக இனித்தது "மனம்"
"இன்சுலின்" என்னவென்று தெரியததால்!

சர்க்கரை என்றாலே கசப்பாக நினைக்க செய்தது"மனம்"
"இன்சுலின்"ன்ன என்னவென்று தெரிந்ததால்!
******************************************************
வாழ்க்கையில
இறந்தும் வாழலாம் என்பதை
தெரிந்தும் வாழமால் இறக்கிறோம்!
ஆறாம் அறிவின் சாதனை தான் இது!
*****************************************************

"பாச கயிறோடு"
வருகிறான் "எமன்"
"உயிர் எடுக்க"
******************************************************
பசுவிடம்
பாலை கரந்து எடுத்துக்கொண்டு
பசு சரியாக பால் கொடுக்கவில்லை
என்கிறான் மனிதன்!-ஆம்
கொடுக்கவில்லை தான் பசுவின்
கன்றுக்கு....
******************************************************

நான் உங்களுடன்
இருக்கவேண்டிய அவசியமில்லை!-இருக்கிறேன்
என்பதை உணர்தலே! அவசியம்!
"நினைவுகள்"
******************************************************

‪#‎மௌன‬-போர்!

நான் உன்னிடம்
பேசாமல் இருந்தபோது சுகமாக இருந்தாய் "நீ"

நான் உன்னிடம்
பேசியபோது சோகமாக இருந்தாய் "நீ"

நான் பேசிய வார்த்தையைவிட
பேசாத வார்த்தையை தான் விரும்புகிறாய் "நீ"

என் மௌனத்திற்கு தான் எத்தனை "வலி"மை

******************************************************

‪#‎H2O‬"

நீர் இல்லாமல் காற்றில்லை
காற்றில்லாமல் நீரில்லை
நீரையும்,காற்றையும் பிரிக்க
என் மனம் விரும்பவில்லை!
நீரும்,காற்றும் இல்லாமல்
யாருமில்லை என்பதால்!
******************************************************

"நீ"
உன் வாழ்நாளில்
மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!
******************************************************

அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com

No comments:

Post a Comment