Monday 20 May 2013

வெற்றி


நாம் அனைவரும்
"வெற்றி" பெற வேண்டும் என்ற
எண்ணத்தோடு உழைக்கிறோம்
அதற்கு மாறாக
"தோல்வி" அடையக்கூடாது என்ற
எண்ணத்தோடு உழையுங்கள்
நிச்சயமாக "வெற்றி"
உங்கள் முன் வாசலின்
வழியாக வரும்
"தோல்வி"
உங்கள் பின் வாசலின்
வழியாக செல்லும்...

பிரிவு


நீயும் நானும்
சேர்திருக்கும் போது வராதது...

நீயா நானா என்று
விவாதிக்கும் போது வருவது...

நாம் இம்மண்ணில்
தோன்றும் போது தோன்றியது

நாம் இம்மண்ணில்
இருக்கும் வரை ஆட்கொண்டிருக்கும்
நினைவுகளின் சங்கமம்.

நாம் இருக்கும் போது
நம் மதிப்பை அறியாதது...

நாம் மாய்ந்தப்பின்
நிரந்தரமாவது...

                         இப்படிக்கு

                          "பிரிவு"

Sunday 19 May 2013

இலஞ்சம்!


இது
நாம் மண்ணில்
பிறக்கும்போது
தொடங்கி-தஞ்சமாகி
பிறகு
நாம் மண்ணில்
மாயும் வரை
நம்முடன் வாழும்
ஒட்டுண்ணி!

யார் குற்றவாளி?


எல்லாம் தெரிந்தவர் கடவுள்...
எல்லாராலும் தேடப்படுபவர் கடவுள்...      
எல்லாம் அறிந்தவர் கடவுள்...
எல்லாராலும் அறிவிக்கப்பட்டவர்
அவரவர் கடவுள்...      
எல்லாம் அவன் செயல்...
அவனின்றி எச்செயலும் இல்லை...
அச்செயல் குற்றமானால்...
தண்டனை யாருக்கு?

அருள்

இவன்!
இல்லாமல்
இறைவன்
இல்லை...

இவனுக்காக
வேண்டுகிறார்கள்
இறைவனிடம்...

கிடைப்பானா?
இவன்!

இருந்தால்
கிடைப்பான்...      

ஜா"தீ"



இது
காலத்தின்
வழிதோன்றல்
இது
இரு உள்ளங்களை
பிரிக்கும் கொடிய
வியா"தீ"
இந்த
"தீ"
எப்போது
அணையும்...?

கல்லறை


இது
இனம், மொழி, மதத்தால்
வேறுபட்ட போதிலும்
அனைவரையும்
ஒன்றுபடுத்தும்
விழிக்காத உறக்கத்தில்...    

தன்னம்பிக்கை


வண்ணத்துப்பூச்சி
அதன் சிறகுகளை
வண்ணக்களஞ்சியமாகவும்...
அதன் உடலை
பட்டுக்களஞ்சியமாகவும்...
நினைத்து மேலே
மகிழ்ச்சியில் "கலர் புல்லாக"
பறக்கிறது. ஆனால்
மனிதா? நீ மட்டும் ஏன்?
உன்னை சுமையாக
நினைக்கிறாய்.....?      

யார் மனிதன்?


சிந்திக்க தெரிந்தவன் மனிதன்!
அம்மனிதரில் சிந்திக்க!!
மறந்தவன் மிருகம்!!!!