Sunday 9 June 2013

பாடங்களின் சிறப்பு

"அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்."
                                                                                               *பெர்னாட்ஷா*


      என்ற சொல்லுக்கிணங்க மாணவ செல்வங்களாகிய நீங்கள் படிக்கும் பாடத்தின் அவசியத்தை உணர்ந்து படிக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளது.

      * கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்னதாக தோன்றிய மொழி என்ற சிறப்பைவுடைய மொழி பாடங்களில் முதலாவாதாக வரும் தமிழர்களின்
தாய்மொழியாம் 'தமிழ்மொழி'. அந்த 'தமிழ்மொழி' இன் நல்ல படைப்புகளை நன்கு படித்து நீங்களும் 'தமிழ்மொழி' இல்  நல்ல படைப்புகளை படைக்க வேண்டும்.

      * அடுத்ததாக இன்றைய நவீன உலகத்தின்  'இணைப்பு மொழியான ஆங்கிலத்தை' நன்கு கற்று உலக நாடுகளிடையே நல்லதொரு நட்புணர்வை வளர்க வேண்டும்.

      * அதற்கு அடுத்தபடியாக 'அறிவியலின் அரசி' என்ற சிறப்புடைய 'கணிதம்' எங்கும் கணக்கு எதிலும் கணக்கு என்பார்கள் அந்த சொல்லுக்கிணங்க  நாம் இப்பூவுலகில் பிறந்த நேரத்தில் தொடங்கி இறக்கும் நேரம் வரை நாம் வாழ்ந்த காலத்தை சொல்லும் கணக்கை மனபாடமின்றி புரிந்துகொண்டு பயிற்சி செய்து கணிதத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து 'கணிதமேதை' களாக வேண்டும்.

      * அடுத்ததாக விவாத்திற்குட்பட்ட தத்துவங்களையும், அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட விதிகளைவுடைய  நம் அறியாமையை களைந்து, அறிவை வளர்க்கும்  'அறிவியல் பாடம்'    இதை நீங்கள்   ஆராய்ந்து ,சோதனை மூலம் கற்றறிந்து வருங்காலத்தில்  பல அரிய கண்டுபிடிப்புகளை   கண்டுபிடித்து  'இளம் விஞ்ஞானிகளாக' வளம்  பெற்று வலம்வர வேண்டும்.                                                                      


       * அடுத்ததாக 'சமூக அறிவியல்' இன்றைய சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை படிக்கும் நீங்கள் அதை களைந்து நாளைய   சமூகத்தில் அதற்கு தீர்வு காண வேண்டும். என்ற எண்ணத்தோடு நின்றுவிடமால் இன்று வரலாறு படிக்கும் நீங்கள் நாளைய வரலாறு உங்களை படிக்குமாறு 'வரலாறு' படைக்க வேண்டும். என்ற  எண்ணத்தோடு படிக்க வேண்டும் என்று   சொல்லி வாழ்த்துகிறேன்.              

No comments:

Post a Comment